இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேணல் டேவிட் அஷ்மான் (Colonel – David Ashman) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவை கடற்படை தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த இச்சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி விடைபெற்றுச் செல்லும் குறூப் கப்டன் ப்ரேசர் நிக்கல்சனும் (Group Captain – Frazer Nicholson) கலந்துகொண்டார்
இதன்போது விடைபெற்றுச் செல்லும் பாதுகாப்பு ஆலோசகர் ப்ரேசர் நிகல்சன் தனது பணிக்காலத்தில் இலங்கைக் கடற்படை வழங்கிய ஒத்துழைப்புத் தொடர்பில் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.