LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, January 14, 2019

நிறைவான பொங்கல் எப்போது?!



போன முறையும் பொங்கல்
கடன் பட்டே பொங்கினோம்!
இந்த முறையும்
எமக்கு விடியவில்லை!
இப் பொங்கலை ஈடுவைத்தேனும்
இனிப்பாகப் பொங்கவேண்டும்

மனைவிக்குத் தெரியாது
மகளின் மாலை பொக்கற்றில் இருக்கிறது!
ஆசை மனைவிக்கு விஸ்வாசம் சாறி
அன்பு மகளுக்கு பேட்ட டொப் ஜீன்ஸ்
எனக்கு விஸ்வாசம் வேட்டி சேட் வாங்கி வந்து
மனைவியிடம் பெரிய பாராட்டுப் பெறவேண்டும்

மனைவி ஏதும் கேட்டால்
என்ன செய்வது?
என்றாலும் துணிந்துவிட்டேன்
கடைக்குப்போய்....
புத்தாடையோடு வந்தேன்
புன்னகை தவழ பாரிக்குது என்று வாங்கினாள்
விரித்து விரித்துப் பார்த்து விட்டு
வீட்டுக்குள் ஓடினாள்..!

வேகமாய் வந்தாள்
என்னை வெறிக்கப் பார்த்தாள்
மகளின் மாலை எங்கே எனக்கேட்டாள்?!
ஊமையாய் நின்றேன்

பொங்கல் பொருட்கள் பறந்தன!
இடியும் மின்னலும் என்னைத் தாக்குகிறது!
பெருத்த மழை சோ வென்று
கொட்டிக்கொண்டே இருக்கிறது!

இந்த மழை எப்போது ஓயும்!
எங்களுக்கு இனிப்பான பொங்கல்
எப்போது வரும்?!

அகரம் செ.துஜியந்தன்



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7