யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது என்று ஆளுநரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆளுநர் சுரேன் ராகவன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் உட்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.