இலங்கை அரசும், உலக
உணவு திட்டத்துடன் இனைந்து கால நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின்
வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பயிற்சி பட்டறைகளை நடாத்தி வருகின்றன
தேசிய கொள்கைகள்
,பொருளாதார ,விவகார ,மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு ,வடமாகான
அபிவிருத்தி தொழில் பயிற்சி திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள்
அமைச்சின் கீழ் இலங்கை அரசும், உலக
உணவு திட்டத்துடன் இனைந்து இலங்கையில் கால நிலையால் பாதிக்கப்பட்டுள்ள
மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட ஐந்து
மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பயிற்சி பட்டறைகளை நடாத்தப்பட்டு
வருகின்றன
இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச
செயலக பிரிவில் அதிகம் வறுமை கோட்டின் கீழ் வாழும் பிரதேசமாக மண்முனை மேற்கு பிரதேச செயலகம் தெரிவு
செய்யப்பட்டு அப்பிரதேச மக்களுக்கான ஐந்து நாள் பயிற்சி பட்டறைகள் மட்டக்களப்பு
சத்துருக்கொண்டான் சர்வோதய மண்டபத்தில் நடைபெறுகின்றது
மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் நடைபெறும் இந்த ஐந்து
நாள் பயிற்சி பட்டறையில் உலக உணவு திட்ட
திணைக்கள அதிகாரிகள் வளவாலர்களாக கலந்துகொண்டுள்ளனர்
ஐந்து நாள் நடைபெறுகின்ற பயிற்சி பட்டறையினை மாவட்ட அரசாங்க அதிபர்
எம் .உதயகுமார் ஆரம்பித்து வைத்தார் .
இந்நிகழ்வில் உலக உணவு திட்ட
மேலதிக செயலாளர் கே .மகேஸ்வரன் ,மண்முனை மேற்கு பிரதேச செயலக திட்டமிடல்
பணிப்பாளர் சுதாகரன் மற்றும் பிரதேச
செயலாளர் , நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் , காலநடை திணைக்கள அதிகாரிகள் , விவசாய
திணைக்கள அதிகாரிகள் , கைத்தொழில் திணைக்கள அதிகாரிகள் , தொழில் பயிற்சி திணைக்கள
அதிகாரிகள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , கமநல திணைக்கள அதிகாரிகள் மாவட்ட செயலக
உலக உணவு திட்ட
திணைக்கள அதிகாரிகள் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட
பொதுமக்கள் கலந்துகொண்டனர்