மாற்றுக் கட்சியினர் அதிமுக வில் இணையும் விழா பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அதிமுக ஓர் ஆலமரம் போன்றது. வருகிறவர்களுக் கெல்லாம் நிழல் கொடுக்கிறது. இந்த இயக்கத்தில் விசுவாசம் மிக்கவர்கள், உண்மையாக உழைக்கிறவர்களுக்கு பதவி நிச்சயமாக தானாக தேடிவரும்.
ஜனநாயக அடிப்படையில் செயல்படும் கட்சி அதிமுக மட்டும்தான். திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், அதற்கடுத்து உதய நிதி என வாரிசு அடிப்படையில் உள்ளது.
இந்திய அளவில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. இதை சகிக்க முடியாத எதிர்க்கட்சியினர் அதிமுக ஆட்சி குறித்து விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
இந்த ஆட்சி நீடிக்குமா என்று சந்தேகம் எழுப்பினர். ஆனால், இரண்டு ஆண்டு காலம் சிறப்பான முறையில் ஆட்சி நடைபெற்றுள்ளது. தேமுதிக, காங்கிரஸ், அமமுக கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அனைவரையும் வரவேற்கிறேன்“ என தெரிவித்துள்ளார்.