மட்டக்களப்பு மாநகர சபையும் மட்டக்களப்பு மாவட்ட
செயலகமும் இனைந்து நடாத்தும் பௌர்ணமிக் கலை விழா மட்டக்களப்பு காந்தி
பூங்கா முன்றலில் நடைபெற்றது
கலை,கலாசார குழுத்தலைவரும் ,மாநகர
உறுப்பினருமான வி .தவராஜா தலைமையில்
நடைபெற்ற பௌர்ணமிக் கலை விழா நிகழ்வில் முன்னிலை
அதிதிகளாக மாநகர முதல்வர்
தியாகராஜா சரவணபவன் ,மாநகர ஆணையார் கே .சித்திரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்
மங்கள விளக்கேற்றப்பட்டு , மாணவி அக்சயாவினால் மாநகர கீதம் பாடப்பட்டு
ஆரம்பமான பௌர்ணமிக்
கலை விழாவில் வரவேற்பு உரையினை கலை ,கலாசார குழு செயலாளரும் , மாநகர
உறுப்பினருமான எம் .சண்முகலிங்கம் நிகழ்த்த தலைமை உரையினை கலை,கலாசார குழுத்தலைவரும் ,மாநகர உறுப்பினருமான வி .தவராஜா வாங்கினார்
இதனை தொடர்ந்து தீந்தமிழ் எனும்
சிறப்புரையினை கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்தந்தை அ .
நவரட்ணம் வழங்கினார்
மாதாந்தம் நடைபெறும் பௌர்ணமிக் கலை
விழா நிகழ்வின் ஏழாவது நிகழ்வானது நேற்று மாலை நடைபெற்றது .
நிகழ்வில் மட்டக்களப்பை பிரதிநிதித்துவ படுத்தும்
கலைஞர்களின் நர்த்தன நாட்டியம் ,நாடகம் ,கூத்து போன்ற கலை கலாசார நிகழ்வுகள்
நடைபெற்றது
இந்நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலான் , பிரதி
ஆணையாளர் , என் .தனஞ்சயன் ,மாநகர சபை உறுப்பினர்கள் , மாணவர்கள் , பொதுமக்கள் என
பெருமளவானோர் கலந்துகொண்டனர்