கென்ய தலைநகர் நைரோபியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அசம்பாவிதம் இடம்பெற்ற பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சோமாலியாவைத் தளமாக கொண்டு இயங்கும் அல் ஷவால் அமைப்பு குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு உரிமை கோரியுள்ளது.
துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்ற குறித்த நட்சத்திர விடுதிக்கு நான்கு ஆயுததாரிகள் சென்றதை தாங்கள் பார்த்ததாக சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், குண்டு வெடிப்பு இடம்பெற்ற நட்சத்திர விடுதியிலிருந்த 100 இற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, கென்யாவில் கடந்த 2013ஆம் நடாத்தப்பட்ட இதுபோன்றதொரு தாக்குதல் சம்பவத்தில் 150 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.