அவர் மேலும் குறிப்பிடுகையில், “தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது, வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையோடு கூடிய ஒரு சமஷ்டி முறையிலான தீர்வையே.
ஆனால் இவ்வாறான அம்சத்தையுடைய ஆலோசனைகள் இப்புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனையில் முன்வைக்கப்படவில்லை.
இப்புதிய அரசியலமைப்பு ஆலோசனையில் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய விடயங்கள் இல்லாவிட்டாலும் பல முன்னேற்றகரமான அம்சங்கள் இருக்கின்றன.
இதுவொரு சமஷ்டிக்கான அரசியலமைப்பு என்று சொல்லமுடியாது. ஆனால் இப்போது இருக்கும் நிலையிலிருந்து சற்று முன்னேற்றகரமான பல ஏற்பாடுகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனாலும் இந்த ஆலோசனையிலிருந்து எந்தளவு அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்படுமென்பதும் சந்தேகத்துக்குரியதே” என்று அவர் மேலும் தெரிவித்தார்.