இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் எவையும் வெளியிடாத சிறப்புப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.