சாட் தலைநகர் என்டிஜமேனாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஒரு கூட்டு செய்தியாளர் மாநாட்டின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய ஆபிரிக்க நாட்டின் தலைவர் என்ற ரீதியில், சாட் ஜனாதிபதி தனது முதலாவது இஸ்ரேலுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயமானது கடந்த 1972 ஆம் ஆண்டளவில் இராஜதந்திர ரீதியாக இஸ்ரேலுடன் முறிந்து போன உறவை மீள புதுப்பிக்கும் வகையில் அமைந்தது. எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய இரண்டு நாடுகளுடன் மாத்திரம் நெருங்கிய ராஜதந்திர உறவுகளை கொண்டுள்ளது.
அதேவேளை, பிரதமர் நெதன்யாகு வளைகுடா நாடுகளுடன் சற்று காரசாரமான கொள்கையுடன் செயற்படுவதாக சூசகமாக தெரிவித்துள்ளார். குறித்த வளைகுடா நாடுகள் பிராந்திய அதிகார மையத்திற்கு எதிரான ஈரானின் இயல்பான நட்பு நாடுகள் என்று இஸ்ரேல் கருதுகின்றது.