குறித்த நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள், மாவட்ட உழவர்கள் மற்றும் கிராம மட்ட சமூக அமைப்புக்கள் இணைந்து நடத்திய இவ்வருடத்துக்கான உழவர் விழாவில், பாரம்பரிய விளையாட்டுக்கள், கவியரங்கு, கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வுகளில் கொடியேற்றல், தேசிய கீதம், தமிழ் மொழி வாழ்த்து, மங்கல விளக்கேற்றல், ஆசியுரை, வரவேற்புரை நடனம், வரவேற்புரை, நெல் குற்றுதல், பொங்கல் பானையில் புத்தரிசியிடலுடன் பொங்கல் விழா நடைபெற்றன.
வரவேற்புரையினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்தும் நிகழ்வுரையை போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.ராகுலநாயகியும் நிகழ்த்தினர்.
பண்பாட்டு (தைப் பவனி) பவனி மாட்டு வண்டிகள், பாரம்பரியமான கரகம், கும்மி, காவடி, வசந்தன் நடனங்கள், உழவர்களின் பாரம்பரியமான உபகரணங்கள், பொருள்களுடனான பவனிகளும் நடைபெற்றன. இப்பவனியில் காலை அறுவடை செய்யப்பட்ட நெல்லும் எடுத்துவரப்பட்டன.
தைப்பவனி பலாச்சோலை ஸ்ரீ கருணைமலைப் பிள்ளையார் ஆலயத்தினை வந்தடைந்ததும், மாவட்ட உழவர் விழா நிகழ்வுகள் ஆலய முன்றலில் நடைபெற்றன.
இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுக்களான கிளித்தட்டு, வாட்ப்போர், வட்டக்காவடி, கிட்டிப்புல் உள்ளிட்டவை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.