இதேவேளை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில் 10 சதவீதத்தை மேலும் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பெரும்பாலான நிதி தேவையுடைய மாணவர்களுக்கு உதவிசெய்வதற்கு தகுந்த நேரம் வந்துள்ளதாக பயிற்சி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அமைச்சர் மேர்லி ஃபுல்லர்டன் தெரிவித்துள்ளார்.
இப்புதிய கட்டமைப்பின் கீழ் 2019-2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் கல்விக் கட்டணத்தை 10 வீதத்தினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இக்கட்டணம் தொடர்ந்தும் செயற்பாட்டில் இருக்கும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.