வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) மாலை பருத்தித்துறை நகரில் குறித்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
பருத்தித்துறை நகரப் பகுதியில் சுமந்திரன் வரவேற்கபட்டு பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் வடமராட்சி பொது அமைப்பினர்கள் மற்றும் இளைஞர்களினால் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க மேளதாளங்களுடன் வடமராட்சி பருத்தித்துறை நகரிலிருந்து ஊர்வலமாக நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை துறைமுகத்தின் அருகிலுள்ள கொண்டன பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக குறித்த வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
தமிழினத்தின் காவலனே வருக வருக” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிர் எம். சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் மிக பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற விழாவும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (16) மதியம் 3.30 மணியளவில் பருத்தித்துறை நகரில் இருந்து வரவேற்கப்பட்டு, மெத்தக் கடை சிவன் கோவில் பகுதியில் பாராட்டு விழா இடம்பெற்றது.