கென்ய தலைநகரான நைரோபியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 21 பேர் உயிரிழந்த நிலையில், தீவிரவாதிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அவர்களில் கனடாவைச் சேர்ந்த Abdihakim Guleid (46)என்பவரும் ஒருவர் என கூறப்படுகின்றது. துப்பாக்கி ஏந்திய நால்வரும், மனித வெடிகுண்டாக செயல்பட்ட ஒருவரும் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.
சோமாலிய தீவிரவாத அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் என கருதப்படும் அந்த ஆயுததாரிகள் நால்வரும் பொலிசாருடன் நடந்த மோதலில் உயிரிழந்தனர்.
அந்த தீவிரவாதிகளுக்கு பல்வேறு வகையில் உதவிய பலரும் கைது
செய்யப்பட்டுள்ள நிலையில்நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்தநிலையில் கனேடியரான Abdihakim Guleid தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் அவரது குடும்பத்தினர் அவர் நிரபராதி என தெரிவித்துள்ளனர்.