குறித்த தாக்குதல் தொடர்பில் கடந்த 2018ஆம் ஆண்டு சிறைச்சாலைக்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த கைதிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என சிறைச்சாலை தலைவரிடம் கோரிக்கைகளை முன்வைத்தது.
இருப்பினும் அதற்கான நடவடிக்கை இன்னும் எடுக்கப்படாத நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் வெளியிட்டுள்ளது.
மேலும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அவ்வறிக்கைகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.