எடின்பேர்க் பிரபு செலுத்திய லாண்ட் ரோவர் வாகனம் ( Land Rover) கியா (Kia) கார் ஒன்றுடன் மோதியதால் ஏற்பட்ட இவ்விபத்தின்போது பிலிப் எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளதாக அறிய தரப்பட்டுள்ளது.
குறித்த கியா காரில் பயணித்த 9 மாத குழந்தை எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளதாகவும் கார் சாரதியான 28 வயதான பெண் சிறிய சிராய்ப்பு காயங்களுக்கும் காரில் பயணித்த 45 வயதான பெண் மணிக்கட்டு உடைவுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து அந்த வீதியின் வேக வரம்பை குறைப்பதற்கும் வேகக் கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் ஔிப்படக் கருவிகளை பொருத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.