இரு குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாகவே இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களைக் கைதுசெய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற உணவகம் மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.