கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர வேண்டியத் தேவை எம்மனைவருக்கும் இருக்கிறது. நாம் தற்போது கொண்டுவரவுள்ள அரசியலமைப்பானது, ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பாக இருக்காது.
ஐக்கிய தேசியக்கட்சிக்கு இதனை தனியாக கொண்டுவந்து நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை. இது ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாகவே கொண்டுவரப்படவுள்ளது.
இதனை நிறைவேற்ற வேண்டியத் தேவை எமக்கு மட்டுமன்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இருக்கிறது. எனவே, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டுமாக இருந்தால் இரண்டு பிரதானக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதற்கான சந்தர்ப்பமாகவே நாம் இதனைக் கருதுகிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஒற்றையாட்சிக்கும் பௌத்தத்துக்கும் முன்னுரிமை வழங்குவதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஏனெனில், அடுத்த நாடாளுமன்றில் எவ்வாறானவர்கள் வருவார்கள் என யாருக்கும் தெரியாது. இந்த வருடத்தில் இதனை நிறைவேற்றிக்கொள்ள முடியாவிட்டால், அடுத்த 100 வருடங்களுக்குக் கூட இந்த அரசியலமைப்பு இருக்கக்கூடும் என்பதே உண்மையாகும்” என நலின் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.