அத்துடன் இந்தியாவை அழிக்கவே இவர்கள் ஒன்றுகூடியுள்ளதாக பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் ராகுல் சின்ஹா இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
இதில் பல மாநிலங்களிலுள்ள 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவிக்கையில், “ஊழல் கறைபடிந்த தலைவர்கள் அனைவரும் மோடிக்கு எதிராகப் போரிட ஒன்று திரண்டுள்ளனர்.
இந்த ஊழல்வாதிக் கும்பலை எதிர்த்தும் தேச விரோதிகளுக்கு எதிராகவும் நடைபெறும் போரில் மோடியின் பின்னால் இந்நாட்டு மக்கள் உறுதியாக துணைநிற்பார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மத்திய இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஊழல்வாதிகள் அனைவரும் மம்தாவுடன் ஒரே மேடையில் இணைந்துள்ளனர். இவர்களை தனித்தனியாக பெயர்களை குறிப்பிட்டுக்கூற வேண்டியதில்லை. நீங்களே அந்த ஊழல் கறைபடிந்த முகங்களின் எண்ணிக்கையை பார்த்துக் கணக்கிட்டுக்கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.