இதனை எந்த திரையரங்க உரிமையாளர்களும் மறுக்கவில்லை. அதே நேரத்தில் கண்டிப்பாக தமிழகத்தில் விஸ்வாசம் ரூ 90 கோடிகளுக்கு மேல் தற்போது வரை வசூல் செய்திருக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.
இந்த படம் மொத்த ஓட்டத்தில் ரூ 130 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
விநியோகஸ்தரே கூறிவிட்டதால், அவர்கள் கணக்கு படி பார்த்தால் சர்கார் மொத்த வசூலை விஸ்வாசம் 8 நாட்களில் முறியடித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
விஜய்யின் மெர்சல் மற்றும் சர்கார் படங்கள் தமிழகத்தில் ரூ 120 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.