LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, January 15, 2019

ராபின் ஷர்மாவின் "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"



" The Monk who sold his Ferrari " புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
(Who will cry when you die?).

“நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்" என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்:

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுதம் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. உங்கள் தினசரி பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். உதாரணமாய் நல்ல புத்தகம் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் யோசிப்பதிலோ செலவழிக்கலாம்.

11. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.

12. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

13. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கலாம்.

14. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

15. எதிலும் வித்யாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள்.

16. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

19. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

20. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே.


அறிய வேண்டிய ஆளுமைகள்

ராபின் ஷர்மா
கனடா நாட்டில் பிறந்து, உலகறிந்த தன்முன்னேற்றச் சிந்தனையாளராய், எழுத்தாளராய் விளங்குபவர் ராபின்ஷர்மா. " The Monk who sold his Ferrari " என்ற புத்தகம், அவர்பால் உலகின் கவனத்தை ஈர்த்தது. சின்ன வயதில் பெற்றோர்கள் சொன்ன குட்டிக்குட்டிக் கதைகள் அவருக்குள் தேடலை மலர்த்தியதாகச் சொல்கிற ராபின் ஷர்மா, வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார்.
குறுகிய காலத்தில் வளர்ந்து வளம் பெறத் தொடங்கினாலும், வாழ்வில் மனநிறைவு கிடைக்கவில்லை. ”வெளியே பார்க்காதே. உள்ளே பார்” என்று உள்ளே கேட்ட குரலை மதித்ததால் ராபின் ஷர்மா உள்ளே பார்க்கத் தொடங்கினார்.
ராபின் ஷர்மா தன் முதல் புத்தகத்தைக் கொண்டு வந்தபோது தான் உலகத்தை ஈர்க்கப் போவதாக நம்பினாரோ என்னவோ? ஆனால், அவர் சொந்தமாக அச்சடித்த 2000 பிரதிகளும், அவர் வீட்டு சமையலறையை ஆக்கிரமித்துக் கொண்டது.
சுலபத்தவணையில் இல்லாமல் சிரமத் தவணையில் மெல்லமெல்ல விற்பனையாகத் தொடங்கியது.
அதேபோல, அவர் நிகழ்த்திய முதல் பயிலரங்கில், பங்கேற்பாளர்களாக முதலில் கலந்து கொண்டவர்கள் 23 பேர்கள். அதில் 21பேர்கள், அவருடைய குடும்ப உறுப்பினர்கள்.
இரண்டாவது புத்தகத்தையும் அவர்தான் கொண்டு வந்தார். அதுவும் ஆமை வேகத்தில்தான் நகர்ந்து கொண்டிருந்தது. ஹேர்பர் கோலின்ஸ் நிறுவனத்தின் தலைவர் எட் கார்ஸன், ராபின் ஷர்மாவை புத்தகக்கடையில் சந்தித்தார். அந்த சந்திப்பு அத்தனையையும் மாற்றியது. இன்று அவருடைய புத்தகங்கள், 90 நாடுகளில் 60 மொழிகளில் வெளி யாகின்றன.
சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்களில் பலரும் கவிதைக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால், ராபின்ஷர்மா கவிதைகளைப் பெரிதும் படிப்பவர் மட்டுமல்ல. பரிந்துரை செய்பவரும் கூட!!
வாழ்வியல் ஞானத்தை ஒற்றைக் கவிதையில்கூட கண்டுகொள்ள முடியும் என்பது ராபின்ஷர்மாவின் நம்பிக்கை. கானடா நாட்டில் பிறந்து வளர்ந்த போதும், இந்தியக்குடும்பங்களின் இயல்புப்படி, பல நீதிக் கதைகளை ராபின் ஷர்மாவுக்கு குழந்தைப் பருவத்தில் கூறியிருந்தார்கள். இவற்றின் புதிய பரிமாணங்களையே அவர் தன் உரைகளில் புகுத்தி வருகிறார்.
ராபின் ஷர்மாவின் இந்திய விருப்பங்களில் இணையில்லாதது இமயமலை. அந்த மலையின் ஆன்தீக அதிர்வுகளுக்காக அதனை மிக முக்கியமாகக் கருதும் ராபின்ஷர்மா, இன்னொரு சுவாரசியமான கோணத்திலும் இமயமலை பற்றிச் சொல்கிறார்.
”வாழ்க்கை என்பதே மலையேற்றம் அல்லாமல் வேறென்ன? ஞானத்தை நோக்கிய பயணத்தை ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டே உச்சியை விட்டுக் கண்கள் அகலாமல் உற்சாகமாக நடைபோடுவதற்குப் பெயர்தான் வாழ்க்கை.”
குறிக்கோள் நோக்கி உந்தித்தள்ளும் உற்சாகத்தை எழுத்திலும் பேச்சிலும் நிறைத்துக் கொடுக்கும் ராபின்ஷர்மா மேற்கோள்களின் மேதையும்கூட. அவர் அள்ளித்தரும் மேற் கோள்களின் அளவு அசாத்தியமானது. பல அறிஞர்களின் படிப்பறிவிலும் பட்டறிவிலும் பூத்த சிந்தனைகள் வாழ்வின் பொதுவான அம்சங்கள்மீது வெளிச்சம் போடுபவை என்பது ராபின்ஷர்மாவின் நம்பிக்கை.
கீழைநாடுகளின் தத்துவப்பார்வையும் மேலைநாடுகளின் முன்னேற்றச்சிந்தனையும் சங்கமிக்கும் கோட்பாடுகள் ராபின்ஷர்மாவின் தனித் தன்மை.
அவரது சிந்தனைகளில் வெளிச்சமிடும் வீச்சுக்கு இந்தக் கலவையே காரணம்.
”பெரும்பாலான மனிதர்கள், தங்கள் வாழ்வின் மிகச்சிறிய பகுதியையே தீவிரத்துடன் வாழ்ந்ததாய் பின்னாளில் வருத்தம் கொள்கிறார்கள். முழு வாழ்வையும் தீவிரத்துடன் வாழ்வதே முன்னேற்றத் துக்கான பணி”.
”உங்கள் ஒற்றை நாள் வாழ்க்கை என்பதே உங்கள் மொத்த வாழ்வின் ஒருநாள் சுருக்கம்தான். எனவே ஒவ்வொரு நாளையும் முழுமையாய் வாழுங்கள்”.
”வலிகளே வாழ்வின் மிக முக்கியமான பாடங்களைக் கற்றுத்தருகின்றன”.
”அச்சம் என்பது வளர்வதற்காக வாழ்க்கை ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்புகளில் ஒன்று. உங்களை அச்சத்திற்குள்ளாக்கும் விஷயங்களை ஆவலுடன் எதிர்கொள்ளுங்கள்.”
”ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது, தலைமைப் பண்புள்ளவர்களை வேகமாக வளர்த் தெடுப்பதில் இருக்கிறது”.
”மனிதர்கள் பாராட்டுக்களை விரும்பு கிறார்கள். தங்கள் பெருமையை பிறர் உணர வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்”.
”நாம் நம் செயல்களையும் பணிகளையும் கொண்டாட வேண்டும். செயல்கள் நமக்குப் பெருமையும் குதூகலமும் தரவேண்டும். பணி புரிகிற இடம், குதூகலம் மிக்கதாய் ஆகிற போது தான், மனிதர்கள் தங்கள் தலைசிறந்த திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.
”நீங்கள் இன்று எடுக்கும் முடிவுகளே உங்கள் நாளைகளைத் தீர்மானிக்கின்றன”.
”நம் சின்னச்சின்ன பங்களிப்புகளே நம் வாழ்வின் தரத்தையும் அர்த்தத்தையும் தீர்மானிக்கின்றன”.
”தோல்விகள், நம்மை மேம்படுத்துகின்றன. வெற்றிக்கான தேசிய நெடுஞ்சாலைகளே தோல்விகள்.”
”நம்மில் உள்ள குழந்தைத்தனத்தை மீட்டெடுப்பது மிகவும் எளிது. ஏனென்றால் நாம் எல்லோருமே குழந்தைகளாக இருந்தவர்கள் உங்களில் இருக்கும் குழந்தை, வளர்ந்திருக்கும் உங்களை என்னவென்று நினைக்கும் என்பதை மட்டும் யோசித்துப் பாருங்கள்”.
இப்படி எத்தனையோ மேற்கோள்களால் வாழ்வின் குறிக்கோளை எட்ட வழியமைத்துத் தருகிறார் ராபின் ஷர்மா

சுதாகரன் 


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7