செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
மேலும், இந்த செற்பாட்டின் பின்னணியில் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் காணப்படுகிறார் என்றும் அவர் கூறினார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் நாம் கேள்வியொன்றை முன்வைக்க வேண்டும். அதாவது 19 ஆவது அரசமைப்புக்கு இணங்க எமது அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினர் அமைச்சரவையின் முடிவுகள் தங்களுடன் ஆராயப்பட்டே எடுக்கப்படுவதாக கூறிவருகிறார். அப்படியானால், 30 அமைச்சர்களா இந்த அமைச்சரவையின் முடிவுகளைத் தீர்மானிப்பது- அல்லது சுமந்திரனா என ஐக்கிய தேசியக் கட்சியிடம் கேள்வி கேட்க விரும்புகிறோம்.
ஐக்கிய தேசியக் கட்சி இன்று சுமந்திரனுக்கு கீழ் தான் செயற்படுகிறது. அத்தோடு, தாம் நினைத்தால் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியும் எனவும் கூறுகிறார்.
இதிலிருந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமானது, கடந்த காலங்களில் புலிகளின் கொள்கை சரியெனக் கூறிய தரப்பினரின் பேச்சுக்கிணங்க செயற்படுகிறது என்பது தெளிவாகியுள்ளது.
புதிய அரசியலமைப்பு அறிக்கைக்கூட, சுமந்திரனின் யோசனைக்கு இணங்கவே கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை வடக்கு மக்கள் கூட கோரவில்லை.
அதனால்தான், ஐக்கிய தேசியக் கட்சியினர் கூட இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு வருகிறார்கள். இப்படியிருந்தும் இதனைக் கொண்டுவர முயற்சிப்பதானது, எமக்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தனிநபரின் பேச்சைக் கேட்டுத்தான் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. சர்வதேசத்தின் தேவைக்கு இணங்கவே இந்த அரசமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. இதுதொடர்பில் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இது தேவையில்லாமல் எமது நாட்டில் இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் முயற்சி என்றே தெரிகிறது. இது தமிழ்- முஸ்லிம்- சிங்கள மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும்.” என கூறினார்.