மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான தனது கூட்டங்களைப் பற்றிய விவரங்களை மறைத்தத்துடன் தனது மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகளையும் டொனால்ட் ட்ரம்ப் பறிமுதல் செய்ததாக வோஷிங்டன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியும் பொய்யானது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் புலனாய்வுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கோமியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ததை தொடர்ந்து ஜனாதிபதி ட்ரம்பின் செயல்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதி புலனாய்வுத்துறை விசாரணையொன்றை ஆரம்பித்ததாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிக்கை கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
இன்று வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களிடையே பேசிய டொனால்ட் ட்ரம்ப் ‘நான் ரஷ்யாவிற்காக ஒருபோதும் வேலை செய்யவில்லை, இவ்வாறு என்னை கேள்வி கேட்பதே அவமானத்துக்குரிய செயல்’ என கூறினார்.