மொன்றியல் ஆரம்ப பாடசாலையொன்றில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 43 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், காபன் மொனொக்செட் மற்றும் மீதேன் வாயுவை கண்டறிவதற்கான கருவிகள் பாடசாலைகளில் பொருத்தப்படுவதை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் உறுதிசெய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் ஜீன் பிரான்சிஸ், பாடசாலை அதிபர்களுக்கு இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மேலும், பாடசாலைகளில் வெகுவிரைவில் காற்றின் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மொன்றியலிலுள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் கடந்த திங்கட்கிழமை எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 43 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறான அனர்த்தங்களை எதிர்காலத்தில் தவிர்க்கும் வகையிலேயே இந்த புதிய நடைமுறை கையாளப்பட்டு வருகின்றது.
காபன் மொனொக்சைட் வாயு வெளியேற்றத்தினால் ஏற்படும் நச்சுப் பரவலை தடுக்கும் வகையில் வாயு வெளியேற்றத்தை கண்டறியும் ஒரு சாதனமே ‘காபன் மொனொக்சைட் உணர்கருவி’ என்பது குறிப்பிடத்தக்கது.