குடியேற்றத்திற்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம், கனடாவின் இறையாண்மையை பாதிக்காது என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனேடியர்களிடம் கலந்தாலோசிக்காது ஐ.நா. ஒப்பந்தத்தில் ஏன் கையெழுத்திடப்பட்டது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதற்கு தொடர்ந்து பதிலளித்த பிரதமர், ”முழு உலகமும் குடியேற்றவாசிகள் தொடர்பான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் கனடா தனது அணுகுமுறைகளை பிற நாடுகளுடன் பகிர்ந்துக் கொள்ள முடியும்.
நாம் நாட்டுக்குள் யாரை, எவ்வாறு அனுமதிக்க வேண்டும் என்ற விடயத்தில் எமது இறையாண்மையில் எவருக்கும் தலையிட முடியாது.
ஆனால் இந்த ஒப்பந்த விவகாரத்தில் பல போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.