கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“தற்போது நாட்டில் பயங்கரமான யுத்தமாக போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கெதிராக நாம் தற்போது கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதேபோல், துப்பாக்கிகள் தொடர்பிலும் நாம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நாட்டில், 4, 700 துப்பாக்கிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சிலரின் பெயருக்கு 17,18 துப்பாக்கிகள் பதியப்பட்டுள்ளன. இது மிகவும் அபாயகரமானது. எனவே, இந்த துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நாம் தீர்மானித்துள்ளோம்.
அவ்வாறு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளோம். இந்த துப்பாக்கிகள் தற்போது பாதாளக்குழுவினரின் கைகளில்தான் இருக்கின்றன
எனவே, இதனை ஒடுக்க நாம் இராணுவத்தினர் உள்ளிட்ட தரப்பினருடன் இணைந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்” என பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.