துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து பிரதி அமைச்சர் அப்துல்லா மகருப் அவர்களுக்கு திருகோணமலை ஜமாலியாவில் நகராட்சி மன்ற உறுப்பினர் எம்.எம்.முக்தார் தலைமையில் வரவேற்பும் கௌரவிப்பும் இடம் பெற்றது.
(17ம் திகதி ) மாலை இடம் பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது ஜமாலியா பிரதான வீதி காப்பெட் வீதியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் மக்களின் முன் உறுதியளித்தார்.
அத்துடன் தமது பதவிக் காலத்தில் மக்களுக்கான சிறந்த பணிகளை இனங்கண்டு நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.முஸ்தபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.