கடந்த 13ம் திகதி காலை முதல் பிற்பகல் வரை தாம் பாவித்த மின்சார உபகரணங்களான தொலைக்காட்சி கையடக்கதொலைபேசி மின்விசிறி குளிர்சாதனப்பெட்டி சமையலறை சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மின்சார கோளாறு காரணமாக பழுதடைந்துள்ளது.
இவ்வாறு 30க்கும் அதிகமான வீடுகளில் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.என தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.தாம் அன்றாடம் கூலி வேலைக்கு சென்று சிறுகச்சிறுக சேர்த்த தமது வீட்டு மின்சார உபகரணங்கள் பழுதடைந்தமைக்கு மின்சார சபையில் வழங்கப்பட்ட மின்சாரத்தின் உயர் மின் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என நாம் நம்புகின்றோம்.எனவே இதனை ஆராய்ந்து தமக்கான நஸ்டஈடு வழங்குமாறு பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களும் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை பிரதம பொறியியலாளருக்கு வழங்கியுள்ளது.
(அ . அச்சுதன்)