சந்தேக நபர்களிடமிருந்து 14 கிலோகிராம் எடைகொண்ட போதைமிகு அபின்,கோகோயின், மெத்தம்பேடமைன் ஆகிய போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவுஸ்ரேலியாவில் விற்பதற்காக மலேசியாவிலிருந்து மலின்டோ எயார் விமானத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் போதைப் பொருள்களைக் கொண்டு வந்ததாக அதிகாரிகள் கூறினர்.
அவர் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சந்தேகக் கும்பல், சுமார் ஐந்து ஆண்டுகளாகப் போதைப் பொருள்களைக் கடத்தி வந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.