கிம் யொங் சொல், வடகொரியாவின் மேலும் பல அதிகாரிகளுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பீஜிங்கை வந்தடைந்துள்ளார்.
வட கொரிய அதிகாரிகளின் சீன விஜயத்தின் நோக்கம் குறித்தோ, சந்திப்புகள் குறித்தோ இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இதற்கு முன்னர் வொஷிங்டனுக்கு விஜயம் செய்திருந்த கிம் யொங் சொல் உள்ளிட்ட குழுவினர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது, வடகொரிய தலைவருக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையிலான இரண்டாவது உச்சிமாநாட்டை பெரும்பாலும் எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் நடத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பியோங்யாங் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.