மட்டக்களப்பு எல்லை
வீதி ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகதம் பிரானுக்கு
ஸ்ரீ சந்தான கோபாலருக்கும் பிரதிஷ்ட மகா கும்பாபிஷேகம் நிகழ்வுகள் இன்று மிக சிறப்பாக
நடைபெற்றது
மட்டக்களப்பு நகரில்
எல்லை வீதியில் அமைந்துள்ள சிறப்பு மிக்க ஆலயமாக
விளங்கும் ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பரிவார
தெய்வமாகிய ஸ்ரீ நாகதம்பிரானுக்கும் , ஸ்ரீ சந்தான கோபாலருக்கும் பிரதிஷ்ட மகா கும்பாபிஷேகம் நிகழ்வை முன்னிட்டு
நேற்று எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள்
இடம்பெற்று இன்று சுப முகூர்த்த
வேளையில் மகா கும்பாபிஷ்கம் பெருவிழா
விஞ்ஞாபன மிக சிறப்பாக நடைபெற்றது
இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் விசேட யாக பூஜைகளுடன் ஆரம்பமான பிரதிஷ்ட மகா கும்பாபிஷேகம் நிகழ்வில் ஸ்ரீ நாகதம்
பிரானுக்கு ஸ்ரீ சந்தான கோபாலருக்கும் கும்பாபிஷேகம்
நிகழ்வுகள் அடியார்கள் புடை சூழ வேத, நாத, மேளங்களுடன்
அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் கோலாகலமாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
.
இதனை தொடர்ந்து பிரதான
கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய ஸ்ரீ நாகதம் பிரானுக்கு
ஸ்ரீ சந்தான கோபாலருக்கும் அபிஷேகம்செய்யப்பட்டது
மட்டக்களப்பு எல்லை
வீதி ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தின் பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்
பிரதிஸ்டா பிரதமகுரு ஈசான சிவாச்சாரியார் குருதிலகம் சோதிடமணி சிவஸ்ரீ அ.கு . சிவானந்தம் குருக்கள் தலைமையில் ஆலய பிரதம
குரு சர்வ சாதகாசிரியர் சிவஸ்ரீ சி கு .
லவகுமார் சர்மா மற்றும் உற்சவ குருக்கள் இணைந்து நடாத்தப்பட்ட மகா கும்பாபிஷேக
விஞ்ஞாபன நிகழ்வில் பெருமளவான அடியார்கள்
கலந்து சிறப்பித்தனர் .