நுவரெலியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அமைச்சர், “புதிய உத்தேச அரசியல் அமைப்புத் திட்டம் நாடாளுமன்றத்திற்கு அண்மையில் சமர்பிக்கப்பட்டது.
இந்த உத்தேச அரசியல் அமைப்புத் திட்டமானது சிறுபான்மை மக்களுடைய நீண்டகால பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த உத்தேச அரசியல் அமைப்புத் திட்டத்தை இனவாத கண்கொண்டு பார்க்கின்ற ஒரு குழுவினர் எம்மத்தியில் இருக்கின்றார்கள்.
அவர்கள் என்றுமே இனவாதத்தை மாத்திரம் கையில் வைத்துக்கொண்டு இந்த உத்தேச அரசியல் அமைப்புத் திட்டத்தை இல்லாது செய்வதற்கு தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். ஆனால் இதனை சிறுபான்மைக் கட்சிகள் என்ற வகையில் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த நல்லாட்சி அரசாங்கமானது அமைக்கப்பட்ட போது தன்னுடைய தேர்தல் வாக்குறுதியிலே புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுப்பதாக கூறியே ஆட்சி அமைத்தது.
ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக இன்று பல்வேறு சக்திகள் செயற்பட்டு வருகின்றன.
அந்த சக்திகளின் செயற்பாடுகளைக் கண்டு அரசாங்கம் புதிய அரசியல் அமைப்புத் திட்டத்தைக் கொண்டு வருவதில் பின்வாங்குமாக இருந்தால் அது சிறுபான்மை மக்களின் ஆதரவை இழக்க வேண்டிய ஒரு நிலையேற்படும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதியின் வழிகாட்டலோடு புதிய அரசியல் அமைப்பு திட்டத்தை முறையாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து அதனை நிறைவேற்றி அதன் மூலமாக சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.