தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சம்பள அதிகரிப்பு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உள்ளூர் நேரப்படி காலை 2 மணி முதல் 8 மணிவரை Hamburg, Munich, Leipzig, Hanover மற்றும் Frankfurt விமான நிலையங்களில் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான பாதுகாப்பு பணியாளர்கள் ஒரு மணி நேர ஊதியமாக 20 யூரோவை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, ஜேர்மனியில் விமான பாதுகாப்புப் பணியாளர்கள் 11.30 யூரோ முதல் 17.16 யூரோ வரை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.