எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கத்திலிருந்து கடந்த வருடம் வெளியேறிய அதிருப்திக் குழுவினரின் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது, ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருக்கிறது என சுமந்திரன் தெரிவித்ததாகக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “சுமந்திரன் என்பவர் ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விம்பம் அல்ல. அவர் ஒரு தனிமனிதரே. இவருடைய கருத்துக்களை நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களாகக் கூட ஏற்றுக்கொள்வதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் உயர்ந்த ஸ்தானத்திலேயே இருக்கிறது. கூட்டமைப்புக்கு என்று ஒரு புரிதல் இருக்கிறது.
சுமந்திரன் அடுத்த முறை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் தான் நாடாளுமன்றுக்கு வருவார். இதற்காகத்தான் அவர் அச்சுறுத்தும் பாணியில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
அவர் தன்னை வீரராகக் காட்டிக்கொண்டாலும் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாகவோ, வடக்கு மக்களின் பிரதிநிதியாகவோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
கடந்த காலங்களில் வடக்குக்கு அல்ல, அநுராதபுரத்துக்குக் கூட செல்லாதவர்கள் தான் தற்போது வீரர்களாக தம்மை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.” என கூறினார்.