கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இந்த நாட்டில் நிறைய பேர் இராணுவம் என்பதை தவறான அர்த்தத்துடன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இராணுவ வீரர் ஒருவர், இராணுவத்திலிருந்து விலகி ஒருவரை கொலை செய்தால் அவரை நாம் இராணுவ வீரர் என்று கூறமுடியாது. அவர் ஒரு கொலைக்குற்றவாளியாகவே அடையாளப்படுத்தப்படுவார்.
அவருக்கு சட்டத்திட்டத்துக்கு இணங்க, கொலைக் குற்றத்துக்கான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும். அந்தவகையில், இன்னும் இரண்டு வாரங்களில் கடுமையான குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக நாம் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதனால், இனிமேல் புலம்பெயர் அமைப்பினர் இராணுவத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்தமுடியாது. நாம் புலம்பெயர் அமைப்பினருக்கு சவால் விடுக்கிறோம்.
முடிந்தால் கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இராணுவத்தினர் தொடர்பிலான தகவல்களை வழங்குங்கள்.
அதனை ஆராய்ந்து அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுப்போம் என இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம்” என பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.