"பல தமிழ் ஆன்றோராலும், அறிஞர்களாலும், தமிழ் தலைமைகளாலும் வழகாட்டப்பெற்றதுமான ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான தைத்திருநாளாம் இந்த பொங்கல் தினத்தையே எமது தமிழ் புத்தாண்டு தினமாக ஏற்று உலகெங்கும் பரந்து வாழும் பழமையானதும் பல் கலை, கலாசார விழுமியங்களை கொண்ட தமிழ் நெஞ்சங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்
பதில் திருகோணமலையை சேர்ந்த நண்பர் குழாம் மிக பெருமிதம் கொள்கிறது. " என
தமதுஆரம்பகால கல்வியை தமிழ் மொழிமூலமாக திருகோணமலையில் பல திறமையான பாடசாலைகளிலும் அதனகத்தே கொண்ட திறமையான ஆசிரியர் பலரினாலும் வழிகாட்டப்பெற்று இன்று சகல நடவடிக்கையிலும் இந்தியா, கனடா,இங்கிலாந்து,அவுஸ்ரேலியா,டென்மார்க்,அமெரிக்கா என பல நாடுகளிலும் நல்ல நிலைகளில் வியாபித்திருக்கும் அவர்கள் நட்பின் பாலும் தமிழின் பாலும் கொண்ட பற்றின் காரணமாக பல வருடங்கள கடந்தநிலையிலும் இன்றும் நெருக்கமாக இணைந்து 2020 என்ற
what's app குழுமத்தினை உருவாக்கி உள்ள இவர்களே இந்த தீர்மானத்தை மேற் கொண்டுள்ளனர்.
நிறைந்த தேடலும் , ஆழமான பார்வையும் கொண்ட இந்த குழாமிலிருந்தே தட்டுங்கள்.com என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டிருப்பதும் பல சமூக சேவையாளர்கள் உருவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக தமிழர் வரலாற்றினை ஆய்வுக்குட்படுத்தி அதன் பயனாக தைப் பொங்கல் தினமே தமிழர் புத்தாண்டு என அறிந்து
இந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்வதில் பெருமை கொள்கிறார்கள்...