கனேடிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போது வெளிநாட்டு விவகாரங்களுக்கான உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சி விமர்சகர் எரின் ஓ’ரூல்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், இரு கனேடியர்கள் சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தருணம் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு தனது தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவதற்கான உரிய நேரமாக அமைந்துள்ளது.
அதன்படி, சீனாவின் ஹுவாவி நிறுவனத்தை தடை செய்வதன் மூலம் பிரதமர் தனது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
சீனாவின் ஹூவாவி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிதி தொடர்பான தலைமை நிர்வாகி மெக்சிக்கோவிற்கு பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து இரு கனேடியர்கள் சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்த கைது சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.