நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிலிப்பைன்ஸூக்குச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
அத்தோடு ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்.
அதை தொடர்ந்து பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (17) பிற்பகல் மனிலா நகரில் இடம்பெற்றது. உயர் கல்விபெறும் மாணவர்கள், தொழில்வல்லுனர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், அவர்கள் ஜனாதிபதி அவர்களை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்டன.