எனினும் இந்த விடயம் சீனக் குடிமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கும் விடயமாக உள்ளதாக சீனா நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.
அத்துடன் எந்தவொரு கனடா நாட்டவரையும் தாம் தன்னிச்சையாக தடுத்து வைக்கவில்லை என்று சீனாவின் வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவா சங்யிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கனேடிய வௌிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலான்ட் வௌியிட்ட அறிக்கையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பெய்ஜிங் தலைமை தன்னிச்சையாக மரணதண்டனையை நிறைவேற்ற முனைவதாக குற்றஞ்சாட்டினார். அத்துடன் சர்வதேசத் தலைவர்கள் அதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் வேண்டுகோளை அடுத்து, சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதிஅலுவலர் மெங் வாங்ஷூ கனேடிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதன் காரணமாக சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் கடினமான நிலைமை ஏற்பட்டுள்ளது.