குளிர் பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய 3,000 பொதிகளை தயார்படுத்திய தன்னாரவ தொண்டு ஊழியர்கள், அவற்றை 200 சமூக சேவை அமைப்புகள் ஊடாகவும், வீடற்றோருக்கான நிர்வாகங்கள் மூலமாகவும் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு வழங்கப்பட்ட ஒவ்வொரு பொதியிலும், குளிரில் தற்காத்துக் கொண்டு தூங்குவதற்கான தூக்கப்பைகள், ஆடைகள், உணவுப் பொருட்கள், குளிர்காலத்தில் அத்தியாவசியமாக தேவைப்படும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது குளிர் மிகவும் தீவிரமடைந்துவரும் நிலையில், தெருக்களில் வசிப்போர் மற்றும் வீடற்றோருக்கு இந்த உதவிப் பொருட்கள் ஓரளவுக்கேனும் உபயோகமாக இருக்கும் என, இந்த பொதிகளைத் தயார்செய்து வழங்கிய தொண்டு ஊழியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீடற்றோர் வீதம் 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ள நிலையில் இந்த உதவி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.