சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கோடநாடு விவகாரத்தில் மத்திய அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டை தி.மு.க. முன்வைத்துள்ளது. இக்குற்றச்சாட்டை எமது தலைமை ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளாது.
தி.மு.க. எதற்கெடுத்தாலும் பா.ஜ.க. மீது குற்றம் சாட்டினால் மக்களுக்கு சலித்துப்போகும். பின்னர் மத்திய அரசின் மீது குறை கூறினால் மக்களே எதையும் நம்பமாட்டார்கள்.
மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் நாம் இணைவோம். வெற்றி பெற்றதன் பின்னர் நாம் தி.மு.க.விற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்” என தமிழிசை மேலும் குறிப்பிட்டார்.