கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ, இந்த பதவியில் நீடித்து இருக்கக்கூடாது என்றே நாம் வாழ்த்துத் தெரிவித்தோம்.
இந்த அரசாங்கம் என்பது உடையும் பல்லின் நிலைமையில் தான் இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்கட்சியில் இருக்கும்போது பெரும்பான்மையை நிரூபித்துக்கொள்ள முடியுமாக இருந்தாலும், அரசாங்கத்துக்கு வந்த பின்னர் அதனை காண்பிக்க இதுவரை முடியாமல் தான் இருக்கிறது.
நிலைமை இப்படியே நீடித்தால், 2015 ஆம் ஆண்டு 47 உறுப்பினர்களுடன் இருந்த பிரதமராகவே அவர் இருப்பார்” என உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.