மதுரை பள்ளிகுடியில் நடைபெற்ற பாடசாலை நிகழ்வில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகக் கட்சி மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை. அவர்கள் தம் மக்களைப் பற்றியே சிந்திப்பார்கள். ஆனால் மக்களைப் பற்றி சிந்திக்கக் கூடியது எமது கட்சியே.
நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் விவசாயிகளின் பிரச்சினைகள் என்னவென்பது எனக்குத் தெரியும்.
மக்களுக்கு பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் வழங்கியதை தி.மு.க. குறை கூறியது. இதனை ஒரு வழக்குப்போட்டு தடுத்து நிறுத்தவும் பார்த்தார்கள்.
எனவே ஏழைகளுக்கு கொடுக்கும் சேவைகளை தடுக்கின்ற கட்சியாக தி.மு.க கட்சியே உள்ளது” என்று தெரிவித்தார்.