மதுரை விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) யாகம் நடத்தியதாக வெளியான தகவல் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தலைமைச் செயலகத்திலுள்ள என்னுடைய அறையில் இறைவழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். அன்றும் அவ்வாறே வழிபாட்டில் ஈடுபட்டேன். யாகம் நடத்தவில்லை. யாகம் நடத்தினால் முதல்வராகிவிட முடியுமென்றால், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் யாகம் நடத்தலாமே?
யாகம் நடத்தினால் முதல்வராகிவிட முடியுமென்ற மூட நம்பிக்கையை மு.க.ஸ்டாலின் நம்புகிறாரா? எந்த பக்கம் தாவினால் அரசியல் இலாபம் கிடைக்கும் என நினைத்து மு.க.ஸ்டாலின் செயற்படுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளார்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அறையில், நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தியதாகவும், முதலமைச்சர் பதவியை கைப்பற்ற இந்த யாகத்தை நடத்தியதாகவும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த விடயம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.