அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) டோஹாவுக்கு விஜயம் செய்திருந்த நிலையில், கட்டார் வௌிவிவகார அமைச்சர் ஷெய்க் மொஹம்மட் பின் அப்துல்ரஹ்மானுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
டோஹாவில் ஏற்கனவே அமெரிக்க – கட்டார் முதலாவது மூலோபாய சந்திப்பு இடம்பெற்றிருந்த நிலையில், இன்று இரண்டாவது சந்திப்பு நடத்தப்பட்டது. இதன்போது, சில புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன..
மத்திய கிழக்கு நாடுகளுக்கான மிக நீண்ட வார சுற்றுப்பயணயத்தை பொம்பியோ மேற்கொண்டுள்ளார். இதனிடையே இன்று மாலை அவர் ரியாத்துக்கு சென்று சவுதி முடிக்குரிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மானையும் சந்திக்கவுள்ளார்