ஒட்டாவாவில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் ஜினெட் பெட்டிட்பாஸ் டெய்லர் இதனை அறிவித்துள்ளார்.
மக்கள் பல்வேறு உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகின்ற நிலையில், நாட்டின் 37 மில்லியன் கனடியர்களை உள்ளடக்கி இந்த வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொன்றியலிலுள்ள விவசாயிகள் சந்தையான ஜீன் டலோன் சந்தையில் வைத்து இவ்வழிகாட்டி வெளியிட்டு வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் உணவு வழிகாட்டி இதற்கு முன்னர் கடந்த 2017ஆம் ஆண்டே இறுதியாக புதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.