
ஜம்மு காஷ்மீர் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) மாலை கத்போரா பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் அல் பதர் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான ஜீனத்துல் இஸ்லாம் மற்றும் ஷகீல் தார் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பல்வேறு தீவிரவாத குற்றச்செயல்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்ததாகவும் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடமாடும் தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், குல்காம் மாவட்டம் கத்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
