கொழும்பில் சோசலிச மக்கள் முன்னணியால் இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த அரசாங்கம் திட்டமிட்டு மாகாணசபைத் தேர்தலைப் பிற்போட்டு வருகின்றது. இது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
அரசாங்கத்தினது இந்த செயற்பாடுகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி திரைமறைவில் ஒத்துழைப்பு வழங்குகின்றது.
தொடர்ந்தும் அரசாங்கம் அவ்வாறு ஏமாற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாயின் நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும்.
தேர்தல்களிற்குத் தயார் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் அரசாங்கத்தினது இச்செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறான நிலைமைகளை நாம் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு இந்நிலைமை தொடருமானால் நாம் மக்களை ஒன்றிணைத்து பல போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கும்” என வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.