எனவே, தற்போதைய நிலையில் கட்சி சார்ந்து வேட்பாளர்களைப் பெயரிடாது, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் மாத்திரமே வெற்றிபெற முடியும் என்றும் அவர் கூறினார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டிக்கு சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்ற அவர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் பெயரும், சோபித்த தேரரின் பெயரும் முன்னிலையில் இருந்தது. அப்போது ரணில், சோபித்த தேரரிடம் போட்டியிடக் கூடாது நான்தான் வேட்பாளர் என்றார்.
ஆனால் இரண்டாவது நாளில் அவர் வேட்பாளராக இல்லை. சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரை அழைத்துவந்து பொது வேட்பாளராக்கினார்கள். அதே நிலைமைதான் இப்பொழுதும் ஏற்படும்.
அதேபோல், எதிர்த் தரப்பிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா என்றனர், பசில் என்றனர், சமலும் நான்தான் வேட்பாளர் என்கிறார். ஆனால் மஹிந்த தான் யாரையும் பெயரிடவில்லை என்று கூறுகிறார்.
ஆனால் குமார் வெல்கம, தான் மஹிந்தவைத் தவிர வேறு யாரையும் ஆதரிக்கப்போவதில்லை என்கிறார். அது அவர்களின் பிரச்சினை.
இந்த பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு பொது வேட்பாளர் ஒருவரே நிறுத்தப்பட வேண்டும்.
நாட்டின் நிலைமைக்கு ஏற்ப பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் மாத்திரமே, பெற்றிபெற முடியும். இல்லை என்றால் முடியாது. ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குள் மிக முக்கியமானது.”