பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு துறையில் சர்வதேச நிறுவனங்களின் தலையீடு இருப்பது நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்த அவர், இந்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி அரசின் பாதுகாப்பில்லாத பாதுகாப்புத்துறை அமைச்சரே உருவாக்கியுள்ளார் என்றும் சாடியுள்ளார்.
சர்வதேச நிறுவனங்கள் தலையீடு இருப்பதாலே, எந்த முன் அனுபவமும் இல்லாத நண்பரின் நிறுவனத்திற்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வாழ்நாள் ஒப்பந்தம், 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனங்கங்களுக்கும் மோடி அரசு கொடுத்துள்ளதா என கேள்வியெழுப்பியுள்ள அவர், இதே கருத்தையே காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டியது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 2 நாட்களுக்கு முன் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் ஒப்பந்தம் சர்ச்சையாக்கப்பட்டதன் பின்னணியில் சர்வதேச நிறுவனங்கள் உள்ளன என்றும், இந்த நிறுவனங்களின் தொழில் போட்டியாலேயே ரபேல் விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டதென்றும் தெரிவித்திருந்தார்.